Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
28
வரிசை கட்டும் படங்களும் மக்கள் செல்வனும் - வெளியாகின்றது "சிந்துபாத்"

Sooriyan Gossip - வரிசை கட்டும் படங்களும் மக்கள் செல்வனும் - வெளியாகின்றது "சிந்துபாத்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,203 Views
ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களிலும் தனியொரு  இடம்பிடித்து நிற்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் படங்கள் திரையரங்குகளை நோக்கி வரிசை கட்ட ஆரம்பித்துள்ளன.

எந்தவித குழப்பமும் இல்லாமல் தனது இயல்பான நடிப்பினால் கவர்ந்து ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வர வைக்கும் வித்தையை கனகச்சிதமாக கையாளும் வழியை கற்றுக்கொண்டு விட்டார் விஜய் சேதுபதி. இதனால், முதலுக்கு மோசம் ஏற்படாமல் வருமானத்தை தேடிக்கொடுப்பதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும் அவரை வைத்துப் படம் தயாரிக்கப் பின்நிற்பதில்லை.

இந்த நிலையில், முன்னர் விஜய் சேதுபதி நடிப்பில் "பண்ணையாரும் பத்மினியும்", "சேதுபதி" ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் தற்போது "சிந்துபாத்" என்ற படத்தையும் விஜய் சேதுபதியை நடிக்கவைத்து இயக்குகின்றார். கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்க, இந்தப் படம் விஜய் சேதுபதியின் 26வது திரைப்படமாக வெளிவரவுள்ளது. ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில் நடிகை அஞ்சலி விஜய் சேதுபதியுடன் நாயகியாக ஜோடி சேர்ந்துள்ளார்.

இது இப்படியிருக்க, படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாகவும், படத்தை விரைவாக திரைக்கு கொண்டுவருவதற்கான ஏனைய வேலைகள் மும்முரமாக நடைபெறுவதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். இதனால், எப்படியும் ஏப்ரல்மாதம் 11ம் திகதி "சிந்துபாத்" திரைப்படம் திரை காணும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை தயாரிப்புத் தரப்பு வெளியிடும் என்கின்றனர் விஷயமறிந்த தரப்பினர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top