கடந்த 1938-ம் ஆண்டு, தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை பிகாசோ வரைந்திருந்தார். இந்த ஓவியம் சவுதி அரேபியாவை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரால், மிகவும் கவனமாக பாதுக்காக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு, குறித்த செல்வந்தர் தனது சொகுசு கப்பல் மூலம் பிரான்ஸ் சென்றபோது, இனம் தெரியாத சிலரால் அவரிடம் இருந்த ஓவியம் திருடப்பட்டது. குறித்த ஓவியம் திருடப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது அந்த ஓவியம் நெதர்லாந்தில் கிடைத்துள்ளது.
அந்நாட்டின் தலைநகர் Amsterdamமை சேர்ந்த கலை துப்பறிவாளரான ஆர்தர் பிராண்ட் என்பவர், இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றிடம் இருந்து இந்த ஓவியத்தை மீட்டுள்ளார். இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதிக்கு 4,933,040,௦௦௦ ) என்று கூறும் ஆர்தர் பிராண்ட், இந்த ஓவியம் தன் கைக்கு வருவதற்கு முன், கள்ளச்சந்தை மூலமாக 10-க்கும் மேற்பட்டோரிடம் கை மாறி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.