கூகுள் நிறுவனமானது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை ஆகும். 1998இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனமானது சீன ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டு பொய்யானது எனவும் கூகுள் நிறுவனம், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து செயல்படும் என, உறுதி அளித்தார்.