இந்தியாவில் உள்ள ஒருவரை சமூக வலைத்தளம் ஊடாக,காதலித்து,அவரைப் பார்ப்பதற்காக, இலங்கைப் பெண் ஒருவர், இந்தியா சென்று, விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில், தனியார் விடுதியில் சென்று தங்கிய இந்தப் பெண் தற்கொலை செய்துள்ளார்.
இவர் ,தன் காதலனைப் பார்த்தாரா?என்ன நடந்தது?இவர் ஏன் தற்கொலை செய்தார்? என, பல கேள்விகளோடு,காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
விடயம் அறிந்து, இலங்கையிலிருந்து இந்தியா சென்ற குறித்த பெண்ணின் பெற்றோர், தங்கள் பிள்ளை, ஏன் இவ்வாறு செய்தது என காரணம் தெரியாமல் ,உடலை வாங்க மாட்டோம் என மறுத்துவருகின்றனராம்.
சமூக வலைத்தளங்கள் மூலம், இன்று நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள், எண்ணிலடங்காமல் சென்றுகொண்டிருப்பது தான் பெரும் துன்பம்.