தமிழ் சினிமா ரசிகர்கள், சினிமா ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் 29ம் திகதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாவதற்கு முன்னர் வெளியான டிரைலரில், ஒரு ஆள் ஒரு மலைப்பாதையில தனியா போகையில என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்தி விஜய் சேதுபதி வசனத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது. அது மிகவும் பிரபலமானது.
ஒரு ஆள் ஒரு மலைப்பாதையில தனியா போகையில என்ற வசனத்தை தோனிக்கும், சென்னை அணிக்கும் சேர்த்து பயன்படுத்தி டுவிட் செய்து அசத்தி உள்ளார் ஹர்பஜன் சிங்.
அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், "ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க,அந்த #தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜிவ்" என பதிவிட்டுள்ளார்.