நயன் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியானார். குசேலன் படத்தில் ரஜினியுடன் நடிகையாகவே நடித்திருந்தார், அத்தோடு சிவாஜியில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போயிருந்தார் நயன்.
எ.ஆர்.முருகதாஸின் அடுத்த படமான தர்பாரிலும் நயன் நடிக்கின்றார், இந்த படத்தில் நயன் ரஜினிக்கு ஜோடியாக அல்லாமல் வில்லியாக நடிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.
2019ம் ஆண்டு நயனின் நடிப்பில் 8 படங்கள் வெளிவரவுள்ளன, அதில் 2 படங்கள் வெளிவந்த நிலையில், அடுத்த மாதம் Mr.லோக்கல் வெளிவரவுள்ளது. ரஜினியின் தர்பார், விஜய்யின் 63 என இன்னும் 6 படங்கள் தயாராகின்றன.