சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம். இந்த படம் வசூலிலும் சாதனைப்படைத்தது ஒரு குடும்ப படமாக கொண்டாடப்பட்டது என சொல்லலாம்.
உழைப்பாளர் தினமான மே 1ம் திகதி தல அஜித்தின் பிறந்தநாள் அன்று சன் டிவியில் விஸ்வாசம் ஒளிப்பரப்பப்பட்டது. ஒரே நேரத்தில் 18.1 மில்லியனானோர் இந்த படத்தைப்பார்த்துள்ளனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் பார்த்த படமாகவும் சாதனைப்படைத்துள்ளது.
அதே நாளில் ஒளிபரப்பான பிச்சைக்காரன் - 17.6 மில்லியன், பாகுபலி 2 - 17.07 மில்லியன், சர்கார் - 16.9 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.