சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை, அதிகமானவர்கள் விரும்பி உண்ணும் உணவு கருவாடு ஆகும். அசைவ உணவுகளில் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளில் கருவாடு மிக முக்கியமானதாகும்.
மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானதாகும். மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி பிரச்சனைகள் ஏற்படாது என, கூறப்படுகின்றது.
இதேவேளை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிடக் கூடாது.
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருவாட்டை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
அத்துடன் கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் போன்றவற்றை உண்ணவே கூடாது.