இந்த நிலையில் Youtube மூலம் அதிகம் சம்பளம் பெறும் 8 வயது சிறுவன், போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது ஒரு ஆச்சரிய உண்மையே.
''ரியான் காஜி'' என்று அழைக்கப்படும் சிறுவனின் பெற்றோரால் 2015ல் ''ரியான்ஸ் வேர்ல்ட்'' என்ற "Youtube channel ' ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது 22.9 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த சனலில், ரியான் விளையாடும் பொம்மைகளை விமர்சனம் செய்வது என வீடியோ வெளியிட்டு வந்தனர். சில வீடியோக்கள் 100 கோடி பார்வையாளர்களை தாண்டிச் சென்றது. மேலும், சேனல் உருவாக்கியதில் இருந்து அவர்கள் வெளியிட்டுள்ள மொத்த வீடியோக்களையும் சேர்த்து 3500 கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீடியோவில் காண்பிக்கப்படும் பொம்மைகளின் விமர்சனத்திற்காக குறித்த உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஸ்பொன்சர் தொகையை அளித்துள்ளன .
8 வயதான ரியான், யூடியூப் சேனல் மூலமாக ஜூன் 1, 2018 முதல் ஜூன் 1, 2019 வரையிலான காலக்கட்டத்தில், 22 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளார்.