காலையில் நாங்கள் உண்ணும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும் .அப்படி இலகுவாக செய்யக்கூடிய ஒரு உணவை பற்றி தான் நாங்கள் இப்போது பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி மாவு
நெய்
உப்பு
மிளகாய் தூள்
சீரக தூள்
கரம் மசாலா தூள்
முட்டை கலவை செய்ய தேவையான பொருட்கள்
முட்டை
மிளகாய் தூள்
உப்பு
மஞ்சள் தூள்
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
வெங்காயம் பொடியாக நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
முதலில் சப்பாத்தி மாவை பிசைந்து 10 நிமிடம் ஊறவீட்டுக் கொள்ளுங்கள்.பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு தேய்த்து கொள்ளுங்கள்.
தேய்த்த சப்பாத்தி மீது நெய் தடவி பின் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் தூவி உருட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் மீண்டும் தேய்த்து கொள்ளுங்கள் .
பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.தோசைக்கல்லில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கமும் வேக வீட்டுக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேகா வைத்த சப்பாத்தியின் இரண்டு பக்கமும் முட்டைக்கு கலவையை ஊற்றி வேக வீட்டுக் கொள்ளுங்கள்.இரண்டு பக்கமும் முட்டைக்கலவை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது சுவையான முட்டை சப்பாத்தி தயார்!