Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்க அருமையான அழகுக்குறிப்பு ..

Sooriyan FM Gossip - கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்க அருமையான அழகுக்குறிப்பு ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,026 Views
கோடைகாலம் வந்துள்ளது. இனி வெளியில் சென்றால் சருமம் கருப்பாக மாறும். சோர்வு தன்மை உண்டாகும். என்பதால் வெளியே அடிக்கடி செல்வதை சிலர் தவிர்க்கக்கூடும். 
இனி அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. இதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி இன்றைய அழகுக்குறிப்பு பகுதியில் பார்ப்போம். இதனை பின்பற்றிவந்தால் கோடைகால வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்கலாம். கருப்பு என்றால் அழகுதான். இருப்பினும் இந்த இயற்கை முறையை பின்பற்றி வந்தால் பலன் கிட்டும்.

இதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். வெளியே சென்று வீட்டிற்கு வந்த பிறகு ஒரு ஐந்து நிமிடம் எலுமிச்சை சாற்றை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி ஐந்து அல்லது பத்து நிமிடம் வரை தடவி வந்தால் முகம் பொலிவாக காணப்படும்.

ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதில் சீனி சேர்த்து மிருதுவாக முகத்தில் தடவி வந்தால் முகம் கருமை நீங்கி வெண்மையாக மாறிவரும். எலுமிச்சை சாறு அதனுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் சுருங்காமல் இளமை தோற்றத்தில் காட்டும்.

இதனை வாரத்தில் மூன்று நாட்கள் செய்துவந்தால் கோடை காலத்தில் சரியான தீர்வு கிடைக்கும். முடடை ஓட்டினை எப்போதும் தூக்கி போடுவோம். இனி தூக்கி வீசாது பின்வருமாறு செய்து கொள்ளலாம். ஒரு முடடை ஓடு , முடடை வெள்ளைக்கரு, சிறிது எலுமிச்சை சாற்றினை எடுத்துக்கொள்ளவும். முதலில் முட்டை ஓட்டினை நன்கு கழுவி எடுத்து காயவைத்த பிறகு அதனை வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் வெள்ளைக்கருவை சேர்த்து சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து முகத்தில் நன்கு பூசி பதினைந்து நிமிடங்கள் வரை நன்கு காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர சருமம் வெண்மையாக காட்சியளிக்கும்.

அதேபோல வெயிலில் வெளியே செல்வதால் முகத்தில் கருவளையம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அது மறைய வெள்ளரிக்காயை துண்டாக வெட்டி கண்மீது பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கண் குளிர்ச்சி பெற்று கருவளையங்கள் மறைகின்றன.

அதேபோல கற்றாழையை பாதியாக நறுக்கி அதன்மீது தேன் சேர்த்து பத்து நிமிடங்கள் மசாஜ் செய்து ஐந்து நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் முகத்திலுள்ள எண்ணை தன்மை நீங்கி குளிர்ச்சியான உடல் நிலையை தரும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் கோடைகாலத்தில் சருமத்திற்கு ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top