Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
உடல் சூட்டை தணிக்க தர்பூசணி ஜூஸ்

Sooriyan FM - உடல் சூட்டை தணிக்க தர்பூசணி ஜூஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,075 Views
உங்களுடைய உடல் சூட்டை கட்டுப்படுத்த தர்ப்பூசணியை இப்படியெல்லாம் ஜூஸ் செய்து குடித்துப் பாருங்கள்.
ஜூஸ்: 1
முதலில் தர்பூசணி பழத்தை இரண்டாக வெட்டி கொண்டு, அதிலுள்ள சதைப்பற்றுள்ள பகுதிகளை மட்டும் பொடியாக நறுக்கி, எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள விதைகளை நீக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கரண்டி கசகசா விதையை தண்ணீரில் சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் செய்த தர்பூசணி பழத்துடன் 2 கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின் இதனை வடிகட்டி, அதில் உள்ள சக்கைகளை தனியாக வடித்து எடுக்க வேண்டும். பிறகு இந்த ஜூஸுடன் ஒரு கரண்டி கசகசா சேர்த்து, அதில் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சில்லென்று குடித்து பாருங்கள் அருமையாக இருக்கும்.

ஜூஸ்: 2
தர்பூசணி பழத்தை வெட்டி மிக்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்க வேண்டும். இவற்றுடன் கால் கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி சேர்க்க வேண்டும்.
பிறகு இதனுடன் சுவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்துக் கொண்டு நன்றாக அரைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து கலந்துவிட்டு குடித்தால் போதும். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை சளி பிடிக்கும் என்று பயம் இருப்பவர்களும் குடிக்கலாம்.

ஜூஸ்:

3 ஒரு மிக்ஸியில் தர்பூசணி பழங்களை பொடியாக நறுக்கி, விதைகளை நீக்கி , பின்னர் இதனுடன் ஒரு பத்து இதழ் புதினா தழைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஐஸ்க்யூப்ஸ் சேர்த்து குடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து குடிக்கலாம் உடலில் உள்ள சூட்டைக் குறைக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top