தேவையான பொருட்கள்
தக்காளி - 10
எலுமிச்சைப்பழச்சாறு - 1 பழம்
இஞ்சி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
Chili Flakes - 1 தேக்கரண்டி
பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
முதன்முதலில் தக்காளியில் இருந்து விதைகளை நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தை சூடாக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதனையடுத்து எலுமிச்சைப்பழச்சாறு, இஞ்சி, உப்பு, Chili Flakes, பட்டை தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேக வையுங்கள்.வேகா வைத்த பின்னர் தண்ணீர் வற்றியதும், தொடர்ந்து கிளறி கொண்டு இருந்தால் ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிடும்.சுவையான தக்காளி ஜாம் தயார்!