அத்தோடு தற்போது அந்த திரைப்படத்தை இந்தியில் ‘ரீமேக்' செய்து அவர் இயக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து தமிழில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
‘கே.ஜி.எப்.' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் படங்களை தயாரித்து வரும் ஹேம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.
‘‘அழுத்தமான கதையுடன் சுதா கொங்கரா இயக்கத்தில், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ஒரு கதை’’, என்று இந்த திரைப்படத்தை பற்றி குறித்த தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின் ‘வாடிவாசல்' மற்றும் பாலாவின் புதிய படத்துக்கு பிறகு, சுதா கொங்கராவின் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.