Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
சுவையான மோமோஸ்

Sooriyan FM Gossip - சுவையான மோமோஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,007 Views
மரக்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இதைச் செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்,
கரட் – 1,
கோஸ் – 150 கிராம்,
காளான் – 150 கிராம்,
பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி சிறிய துண்டு – 1,
பூண்டு – 7 பல்,
எண்ணெய் – 7 கரண்டி,
தனி மிளகாய் தூள் – ஒரு கரண்டி,
மிளகுத் தூள் – ஒரு கரண்டி,
உப்பு – ஒரு கரண்டி,
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து,
சோயா சாஸ் – 2 கரண்டி.

செய்முறை:

முதலில் ஒரு கப் கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை கரண்டி உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு இதனை ஒரு தட்டு போட்டு மூடி, 15 நிமிடத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும்.

பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், கரட், கோஸ் மற்றும் குடைமிளகாய் இவை அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைத்த பின்னர், பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, அதனுடன் அரை கரண்டி உப்பு சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிய பின்னர், ஒரு கரண்டி மிளகுத்தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு இறுதியாக சோயா சோஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்க வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அதனை பூரி கட்டையின் மீது வைத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு கரண்டி காய்கறி மசாலா சேர்த்து, அதனை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் மடித்து விட வேண்டும். அதாவது சோமாஸ் போன்று மடித்துக்கொள்ளலாம். பின்னர் அடுப்பின் மீது ஒரு பேன் வைத்து, அதில் 5 கரண்டி எண்ணெய் ஊற்றி, செய்து வைத்துள்ள ஒவ்வொரு மோமோஸ்களையும் எண்ணெயில் அடுக்கி வைத்து, மூடி போட்டு, 20 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட்டு, அதன் பின்னர் பரிமாறினால் சுவையான மோமோஸ் தயாராகிவிடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top