ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ஐங்கரன்’ படத்தின் 2வது டிரெய்லர் வெளியாகியுள்ளது.பிரபல இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்,மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘ஈட்டி’ படத்தின் மூலம் பிரபலமான ரவிஅரசு இயக்கியுள்ளார்.ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே 5-ஆம் திகதி வெளியாகவுள்ளது.இதையொட்டி தற்போது ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.சில சிக்கல்களால் வெளியாகாமல் இருந்த இப்படம் இந்த முறை நிச்சயம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.விஞ்ஞானத்தை வைத்து புது பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.