பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் "சூர்யா 41 " இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு 34 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.இந்தத் திரைப்படத்தின் அடுத்தப் படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதனை தொடர்ந்து ஜூன் மாதம் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.