மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.
இப்படத்தின் டீஸரும், சிலிப்சும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வரும் மே 11 ம் திகதி வெளியாகிறது.இந்த பாடல் பத்தல பத்தல' என பெயரிடப்பட்டுள்ளது. பாடலை கமல்ஹாசன் எழுதிப் பாடியுள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.