தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவருடைய நடிப்பில் ஜூன் மாதம் மூன்றாம் திகதி வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம்.
இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் காணொளி ஒன்றினை படக்குழுவினர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர். இந்தக் காணொளியில் இரண்டு பக்கமும் துப்பாக்கிகளால் சுடும் காட்சிகளும் தோட்டாக்கள் பறக்கும் காட்சிகளும் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்தத் திரைப்படம் வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ளன என்பதனையும் இந்தக் காணொளி நினைவுபடுத்துகிறது.