Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
தளபதி 66 திரைப்படத்தின் புதிய அப்டேட்

SooriyanFM Gossip - தளபதி 66 திரைப்படத்தின் புதிய அப்டேட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

707 Views
பீஸ்ட்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தோழாஉள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்தத்திரைப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக", "காதலுக்கு மரியாதை" போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஹைதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top