Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
தல 55இல் உலக நாயகன் கமலும் ?? - புதிய பரபரப்பு

Kamal in Thala55? - தல 55இல் உலக நாயகன் கமலும் ?? - புதிய பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,310 Views
கௌதம் மேனன் இயக்க அஜித்,அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் "தல55" எனும் இதுவரை பெயர் குறிப்பிடப்படாத புதிய படத்தை பற்றி தினமும் ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் வெளியாகிக்கொண்டே  இருக்கிறது. அதனால் இந்தப்படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடமும் மட்டுமன்றி  கோலிவுட் வட்டாரத்திலும் பரவி வருகிறது.

                                                                   இந்நிலையில், இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு சொல்லும் காட்சிகளில் யாராவது ஒரு பிரபலம் குரல் கொடுத்தால் காட்சியமைப்பு சிறப்பாக அமையும் என கௌதம் மேனனுக்கு ஒரு யோசனை தோன்றியபோது, முதலில் ஞாபகம் வந்தது "உலகநாயகன்" கமல்தானாம்.

                                                                ஏற்கெனவே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமுள்ள கௌதம் மேனன் "தல55" படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணியில் கமலை வைத்தே குரல் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக விரைவில் உலகநாயகனிடம் அனுமதி கேட்க கெளதம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

                                                   எதிர்வரும்  பொங்கலுக்கு வெளியிட முடிவுசெய்யப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், வெகுவிரைவில் ஹரிஷ் ஜெயராஜின் இசையில் உருவாகியுள்ள பாடல், இசை வெளியீட்டோடு படத்தின் பெயரையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க தீர்மானித்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.     

உதவுவாரா உலகநாயகன் கமல்....? கெளதம் மேனனுக்கு கை கொடுப்பாரா....
தலயைத் தட்டிக் கொடுப்பாரா?

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top