பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் "சார்பட்டா பரம்பரை". கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இந்த நிலையில், 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.வெளியான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.