Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
இந்திய உலக கிண்ண அணியில் ஆஷிஸ் நேஹ்ரா.......????

Ashish Nehra could make comeback for World Cup 2015 - இந்திய உலக கிண்ண அணியில் ஆஷிஸ் நேஹ்ரா.......????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,916 Views
இந்திய உலக கிண்ண அணியில் ஆஷிஸ் நேஹ்ரா.......????

அடுத்தாண்டு பெப்ரவரியில் அவுஸ்ரேலிய மற்றும் நியூஸ்லாந்தில் ஆரம்பமாகவுள்ள உலக கிண்ண போட்டிகளை எதிர்பார்த்து ஒவ்வோர் அணிகளும் தங்களது முயற்சிகளை மேற்கொள்கின்றன.

உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரினதும் கனவாக காணப்படுகின்றது.இந்த நிலையில் உலக கிண்ணத்தை வெற்றி கொள்கின்ற அணிகளில் இடம்பிடிப்பதும் ஒவ்வொரு வீரரதும் கனவு எனலாம்.

இப்படியிருக்கின்ற போது நடப்பு உலக சாம்பியன்களான இந்தியாவுக்கு உலக கிண்ணத்தை தக்க வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியை தேர்வு செய்வதில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.எப்போதும் போல் துடுப்பாட்டத்தில் கலக்கும் இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சில் தடுமாறுவது வழமையானது.

இதனை கருத்தில் கொண்டு ஒரு அனுபவ வேகப்பந்து வீச்சாளராவது உலக கிண்ண அணியில் இருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கருதுகிறது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2011 ம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்த அனுபவசாலி சகீர் கான் அண்மைய நாட்களில் உபாதையால் அவதிப்படுகின்றார்.

ஆயினும் 2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கு பின்னர் அணியில் வாய்பின்றித் தவித்த 35 வயதான ஆஷிஸ் நேஹ்ரா அண்மைய நாட்களில் சென்னை அணிக்காக IPL போட்டிகளில் கலக்கி வருகின்றார்.

140 KM /H வேகத்திலும் பந்து வீசக்கூடிய நேஹ்ரா வேகப்பந்துக்கு சாதகத்தை கொடுக்கவல்ல ஆடுகளங்களில் சிறப்பாக செயற்படுவார் என்றும் நெருக்கடியான தருணங்களில் ஒரு அனுபவ பந்து வீச்சாளர் இருப்பது அணிக்கும் பலம் சேர்க்கும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கருதுகின்றது.

இதற்கான முன்னாயத்தமாக எதிர்வரும் அவுஸ்ரேலிய  அணிக்கெதிரான தொடரில் நேஹ்ரா அணியில் இணைக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.    

நேஹ்ரா,சகீர்கான் ,ஹர்பஜன்,ஜுவ்ராஜ் ஆகிய பந்து வீச்சாளர்கள் கடந்த 2011 இல் இந்தியா உலக கிண்ணத்தை 28 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி கொள்வதற்கு வலுச்சேர்த்தவர்கள்.

இம்முறை இவர்கள் இல்லாத நிலையில் புவனேஸ்வர் குமார் ,மொஹமெட் சாமி,மோகித் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ அல்லது அஸ்வின், ஜடேஜா போன்ற சுழல் பந்து வீச்சாளர்களுக்கு உலக கிண்ண அனுபவம் இல்லை என்பதை வைத்து கொண்டு நேஹ்ராவை மீண்டும் தேசிய அணியில் உள்வாங்க ஏற்பாடு நடக்கிறது.

எது எவ்வாறாயினும் சென்னை அணி நிர்வாகம் ஆஷிஸ் நேஹ்ராவை தேடி எடுத்து IPLஅணியில் இணைத்த போது,வெகுவிரைவில் நேஹ்ரா இந்திய தேசிய அணியில் இணைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று நாம் sooriyan-sports பக்கத்தில் கருத்து வெளியிட்டமையும் நினைவுக்கு வருகின்றது.

நெஹ்ராவின் வரவு இந்தியாவுக்கு சாதகமானது என்ற நிலைப்பாட்டில் இந்திய தேர்வாளர்கள் ஆர்வம் காட்டுகின்றமையை நோக்குகின்ற போது இதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரிகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top