உலக நாடுகளில் பல வர்த்தகர்கள் அல்லது தொழிலதிபர்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் போனஸ் வழங்குவது வழக்கம். சம்பள முன்பணம், இனிப்புகள், ஆடைகள் என நாங்களும் இந்த போனஸ் விடயம் பற்றி அறிந்திருக்கின்றோம்.
ஆனால் இந்தியாவிலுள்ள வர்த்தக பிரமுகர் ஒருவர் தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்தியாவில் சூரத் என்ற இடத்தில் வசிக்கும் சாவிஜி பாய் எனும் இந்த இரத்தின கல் வியாபாரி தீபாவளியை முன்னிட்டு தன்னுடைய ஊழியர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்கி மகிழ்வித்துள்ளார். 500 பேருக்கு மோட்டார் வாகனம், 300 பேருக்கு வீடுகள் மற்றும் 200 பேருக்கு நகைகளும் பரிசளித்துள்ளார். என்ன ஒரு தாராள மனசு பாருங்களேன் இவருக்கு...

ம்ம்..என்ன உங்களுக்கும் இப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருக்களாமே என்று தோன்றுகிறதா?
தொகுப்பு
ர. பிரவீனா