SooriyanFM Gossip - இந்திய அணியின் புதிய தலைவர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
160 Views
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய வீரர்கள் இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளனர்.
அந்த வகையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியின் உப தலைவராக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
குறித்த அணியில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கருண் நாயர் இடம் பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.