இயக்குநர் H.வினோத் தற்போது தளபதி விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்டப் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி திரைக்கு வரவிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் H.வினோத் யாருடன் இணையப் போகிறார் என்ற இரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விடையளிக்கும் வகையில், தற்போது இது தொடர்பான புதிய தகவலொன்று கசிந்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தைத் தொடர்ந்து, H.வினோத் நடிகர் தனுஷை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாகவும் இத்திரைப்படத்தை 'Seven Screen Studio' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷின் 'குபேரா' திரைப்படம் இம்மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.