தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள "ஜனநாயகன்"திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், விரைவில் இந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆண்டுதோறும் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் திகதி, அவர் நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் நிலையில், இந்த ஜூன் 22ஆம் திகதி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது விஜயின் பிறந்தநாள் விருந்தாக இரசிகர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்தத் திரைப்படம் குறித்த வேறு சில திட்டங்களையும் திரைப்படக்குழு அமைத்துள்ளது.
ஒகஸ்ட் மாதம் முதல் பாடல், ஒக்டோபர் மாதம் இரண்டாவது பாடல் மற்றும் புத்தாண்டு தினத்தில் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"ஜனநாயகன்" திரைப்படம் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.