'குபேரா' திரைப்படம் இம்மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் Pre -Release நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலி கலந்துகொண்டதோடு, 'குபேரா' திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
குறித்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டா குறித்துக் கேட்கப்பட்ட கேள்வியால், நடிகை ராஷ்மிகா மந்தனா வெட்கத்தில் முகம் சிவந்தார்.
நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நாகார்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு நாகார்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, விஜய் தேவரகொண்டாவிடம் என்று கேள்வி எழுப்பியதற்கு வெட்கத்தில் முகம் சிவந்தபடி அனைத்தயும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.