நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தத் திரைப்படம் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது ‘ஜெயிலர் - பாகம் 2’ உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் கேரளாவில் நடைபெற்றன .
இத்திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புப் பணிகள் மைசூரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியைப் பார்க்க இரசிகர்கள் கடல் அலையென திரண்டுள்ளனர்.
ரஜினிகாந்த் காரில் வரும்போது அனைவருக்கும் கை காட்டி அன்பை வெளிப்படுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.