பொலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் மலையாள நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் 'ராமாயணம்'.
இந்தத் திரைப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
நிதேஷ் திவாரி இயக்கும் இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.
அடிக்கடி இந்தத் திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்ற நிலையில், இந்தத் திரைப்படத்தின் Teaser நாளை வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.