இயக்குநர் 'Steven Spielberg' இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த 'Jurassic Park' திரைப்படம் உலக சினிமா இரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி பிரம்மாண்ட வசூலைக் குவித்த திரைப்படமாகும்.
இதன்பின் வெளிவந்த 'Jurassic Park' திரைப்படத்தின் அத்தனை பாகங்களும் வெற்றி பெற்றதையடுத்து, இதன் புதிய பாகமாக 'Jurassic World:Rebirth' திரைப்படம் கடந்த 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 1000 கோடி வசூலை அள்ளியது. இரண்டாவது நாளும் இதே வசூல் தொடர, மொத்தமாக 2 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 2000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.