'Harry potter ' திரைப்படங்களில் நடித்து உலகளவில் பிரபலமடைந்த நடிகை எம்மா வட்சனுக்கு 6 மாதங்கள் வாகனம் செலுத்த தடைவிதித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'Harry potter ' திரைப்படங்களில் வரும் Hermione Granger எனும் கதாபாத்திரத்தில் நடித்த எம்மா வட்சன் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார் . 10 வயதில் நடிக்க வந்து, உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் எம்மா வட்சன், சினிமாவில் புகழ்பெற்ற காலகட்டத்தில் பெண் கல்விக்காக உலகம் முழுவதும் குரல் எழுப்பி வந்தார். பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி zambia முதல் பங்களாதேஷ் வரை பயணமும் செய்துள்ளார்.
இந்த நிலையில், எம்மா வட்சன் கடந்த ஆண்டு oxford நகரத்தில் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் தனது காரை செலுத்திய நிலையில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் எம்மா வட்சனுக்கு 6 மாதங்கள் வாகனம் செலுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.