ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றையதினம் சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
இவ்விழாவின் போது 'கூலி' திரைப்படத்தின் Trailer வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் Trailer இரசிகர்கர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றுவருகிறது. இதேவேளை இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நாகர்ஜுனா முதல் ஆமீர் கான் வரை இத்திரைப்படத்தில் நடித்த அனைவரும் வந்திருந்தனர்.
நடிகர் நாகர்ஜுனா 'கூலி' திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். இதுகுறித்து இவ்விழாவில் பேசிய ரஜினி, "அஜித் நடித்த 'மங்காத்தா' திரைப்படத்தில் வெங்கட் பிரபு ஒரு வசனம் எழுதியிருப்பார், நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறதுனு. அப்படி தான் நாகர்ஜுனா கூலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்" என்று அஜித் பேசிய வசனத்தை விழாவில் ரஜினிகாந்த் பேசியது அஜித் இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.