71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வென்றுள்ளார்.
மூன்று தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்' திரைப்படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில், தேசிய விருது பெற்ற சந்தோஷத்தை திரைப்படக்குழு கேக் வெட்டி விருந்தளித்து கொண்டாடியிருந்தது.