Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
பல சத்துகள் நிறைந்த ஈசல் !

SooriyanFM Gossip - பல சத்துகள் நிறைந்த ஈசல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

451 Views
கறையான் கூடுகளில் இருக்கும் முட்டையில் இருந்து பிறந்து வளரும் ஈசல், உலகின் சில நாடுகளில் உணவாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. 
ஆபிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட காலம் முடிந்து, முதல் மழை தொடங்கும் போது அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகளை வைத்து, அதற்கு கீழே நீர் நிரம்பிய பாத்திரத்தை பொறியாக வைத்து ஈசல்களைப் பிடிக்கின்றனர்.

இதன் பின்னர் இறக்கைகளை நீக்கி, வெயிலில் உலர்த்தி, வறுத்து பொடியாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.

இந்த ஈசல் பொடியில் வேறு எந்த இறைச்சியிலும் காணப்படாத அளவுக்கு அதிக புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான ஒமெகா 3, கொழுப்பு அமிலங்கள், விட்டமின், கல்சியம், மக்னீசியம், துத்தநாகம், மக்னீஸ் உள்பட பல்வேறு சத்துக்கள் அடங்கி இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

இது மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு, இதய பலவீனத்தை நீக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம், பக்கவாதம், முடக்க வாதம் ஆகியவற்றுக்கு எண்ணெயில் ஈசலை இட்டு காய்ச்சி பயன்படுத்தினால், நல்ல பலன் தரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top