நடப்பு சம்பியன் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசியக் கிண்ண போட்டிகள்
செப்டம்பர் 9-ஆம் முதல் 28 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு சல்மான் அலி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு இடம் கிடைக்கவில்லை.
அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பக்கார் சமான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹூசைன் தலாட், குஷ்தில் ஷா, முகமது ஹரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜுனியர், ஷகிப்சடா பர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷகின் ஷா அப்ரிடி, சுப்டான் மொஹீம் ஆகியோர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.