நடிகர் நாகார்ஜுனாவின் 100 ஆவது திரைப்படத்தை ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குபேரா' திரைப்படம் நல்ல வரவேற்பைப்பெற்றது.
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் “தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100 ஆவது படம் உருவாகிறது. இந்தத்திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இது Action, Family sentimentகலந்து உருவாகும் படம். இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் .