Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
இரண்டாவது ஆட்டத்துக்கு தயாராகும் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம்

SooriyanFM Gossip - இரண்டாவது ஆட்டத்துக்கு தயாராகும் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

291 Views
2022ம் ஆண்டு டிசம்பரில் வெளியான திரைப்படம் ‘கட்டா  குஸ்தி’. இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த்  எனப் பலரும் நடித்திருப்பார்கள். இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். 
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இத்திரைப்படம் வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 30 கோடி வசூலையும் குவித்தது.

இந்த திரைப்படம் எமோஷனல், சண்டைக்காட்சிகளோடு சேர்த்து நகைச்சுவை கலந்த ஒரு சிறப்பான திரைப்படமாக அமைந்திருந்தது. மக்கள் மத்தியிலும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.


இவ்வாறிருக்க இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் ப்ரோமோ காணொளி ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளர்.

கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. முதல் பாகத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top