ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
இத்திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'தங்கப்பூவே' பாடலின் வீடியோ இப்பொழுது வெளியாகியுள்ளது.