R.J. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 45ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது ‘கருப்பு’.
இத்திரைப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘கருப்பு’ திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என இரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று திரைப்படக்குழு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.