இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது தனது 25 ஆவது திரைப்படமான ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தை அவரே தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன்பு 'அருவி' மற்றும் 'வாழ்' போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் எதிர்வரும் 19ம் திகதி வெளியாக உள்ளது. இதேவேளை இத்திரைப்படத்தின் Promotion பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் திரைப்படத்தின் முதல் 4 நிமிட காட்சியை தற்பொது வெளியிட்டுள்ளார்.