S . தாணு தயாரிப்பில் மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'Train'.
இத்திரைப்படத்தில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஒரு வருட காலமாக வெளியாகாமல் தாமதமாகிக்கொண்டே இருந்தது.
இந்த திரைப்படத்தின் Digital மற்றும் Satellite வியாபாரம்தான், இத்திரைப்படம் வெளிவருவதற்குத் தடையாக இருந்தது.
சமீபத்தில் , விஜய் சேதுபதி நடித்த ' தலைவன் தலைவி ' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதனையடுத்து, கலைப்புலி தாணு Digital மற்றும் Satellite நிறுவனங்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாடி, Trail திரைப்படத்தை December மாதமளவில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.