விராட் கோஹ்லிக்கு விரைவில் திருமணம் ?இந்தியாவின் இளம் துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லிக்கு விரைவில் திருமண நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
இந்தியாவின் நம்பிக்கை மிக்க ஒரு துடுப்பாட்ட வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மிகு பல வெற்றிகளின் பங்குதாரருமான விராட் கோஹ்லி அண்மைய நாட்களில் ஓட்டங்கள் பெறுவதற்கு பெரும் அவதிப்படுகின்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 4 ஒருநாள் போட்டிகளில் வெறும் 54 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டார்.டெஸ்ட் போட்டிகளிலும் எந்தவொரு அரைச்சதத்தை தானும் தாண்டியிருக்கவில்லை.இதானால் அண்மைய நாட்களில் மிகபெரும் விமர்சனங்களுக்கு இவர் முகம் கொடுத்தார்.

இங்கிலாந்தில் இவரது மோசமான பெறுதிகளுக்கு இவருடைய காதலி அனுஷ்கா சர்மாதான் காரணம் என்ற கதைகளும் இல்லாமல் இல்லை.இங்கிலாந்து தொடருக்கு இந்திய வீரர்கள் சென்ற போது அவர்களது மனைவிமாருக்கும் வீரர்களுடன் செல்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதியை வழங்கியது.
இதன்மூலம் தன் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்ட உதவி அணித்தலைவர் கோஹ்லி தன் காதலி அனுஷ்காவையும் விசேடமாக அழைத்துச் செல்ல அனுமதியைப் பெற்றுக்கொண்டார்.
அங்கும் இங்கும் ஊர் சுற்றித் திரிந்த இந்த கோஹ்லி பயிற்சிகளில் கவனம் செலுத்தாமல் அனுஷ்காவோடு ஊர் சுற்றுவதால்தான் ஓட்டங்கள் பெறுவதற்கு தடுமாறுகின்றார் என்ற கருத்தால் இடைநடுவே அனுஷ்கா இங்கிலாந்திலிருந்து திருப்பி அனுப்பபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள அனுஷ்காவின் வீடு தேடி விராட் கோஹ்லியின் குடும்பத்தார் சென்று சில சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

வெகுநாளாக இருவருக்கும் திருமணம் நடக்க போகின்றது என்ற கருத்துகள் உலாவினாலும் அது வெறும் வெட்டிப்பேச்சாகவேதான் எல்லோராலும் நோக்கப்பட்டது.
இப்படியிருக்க இருவீட்டார் சந்திப்பும் இப்போது பலரது கேள்விக்கும் பதிலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
இருவீட்டாரும் என்ன பேசினார்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பது பற்றி இதுவரையும் எதுவும் சொல்லப்படாவிட்டலும் வெகுவிரைவில் கோஹ்லி+அனுஷ்கா சர்மா திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவே தெரிகின்றது.
"மனைவி வந்த நேரம் நல்ல வாழ்வு வந்து சேரும் ...என்ற பாடல் வரியைபோன்று கோஹ்லி இப்போது இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணிக்கு டோனி ஓய்வெடுத்துக்கொள்ள கோஹ்லி புதிய தலைவராக நியமிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வெகுவிரைவில் இந்த காதல் ஜோடியின் டும் டும் டும் செய்தியை எதிர்பார்க்கலாம் போலிருக்கின்றது.
*தில்லையம்பலம் தரணீதரன்