அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியது.
இதில், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில்,
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து,157 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-0 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.