விஜய் நடிப்பில், H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அண்மையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான “தளபதி கச்சேரி” வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அத்தோடு இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது டிசம்பர் 27ம் திகதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரைலரானது 2026ஆம் ஆண்டு புத்தாண்டை ஒட்டி ஜனவரி முதலாம் திகதி வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.