ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் - சாரா அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘துரந்தர்’.
இத்திரைப்படத்தில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் வெளிவந்த நாளில் இருந்து வசூலில் வேகம் குறையாமல் ’துரந்தர்’ வலம் வருகிறது.
அந்த வகையில், இத்திரைப்படம் வெளிவந்து 21 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.668 கோடி வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ.1,000 கோடி வசூலித்த ஒரே இந்திய திரைப்படம் என்ற சாதனை ’துரந்தர்' படைத்துள்ளது.