H. வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் January 9ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், இரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மலேசியாவில் நடைபெற்றிருந்தது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளிவந்து Super Hitஆன அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படத்தை Sun Pictures நிறுவனம் ஜனநாயகனுக்கு போட்டியாக Re-release செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.