நடிகர் விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை 2010ஆம் ஆண்டு தொடங்கினார் கௌதம் மேனன்.ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இத்திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இக்கதையை கேட்ட விக்ரம் இத்திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படம், நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனை காரணமாக அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இத்திரைப்படம் வெளியாவது தாமதமாகிக்கொண்டே போனது.
பலமுறை திரைப்படத்தின் Release திகதி அறிவிக்கப்பட்டாலும், அந்த திகதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் 'துருவ நட்சத்திரம்' திரைப்பட வெளியீட்டிற்கான பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் விரைவில் திரைப்படத்தின் Release திகதியை அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.