அருள்நிதி நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'Demonte Colony' திரைப்படம் இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த 'Demonte Colony 2' திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்புப் பெற்றதால் இதன் 3ஆவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'Demonte Colony 3' திரைப்படத்தின் Digital மற்றும் Satellite உரிமை இந்திய மதிப்பில் ரூ.50 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருப்பதாக உத்தியோகபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.