H.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'.
இத்திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, இம்மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
இதைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதே வேளை இம்மாதம் 19ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை இடம்பெற வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.